ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரின் காதலன் அஃப்தாப் பூனாவாலா படிப்பதற்காக சட்டப் புத்தகங்களை பெற்று உள்ளார். அத்துடன் கடுமையான குளிர் காரணமாக போர்வைகளையும் பெற்று உள்ளார்.

அதாவது, தில்லியில் உடன் வசித்துவந்த ஷ்ரத்தா வாக்கரைக் கொடூரமாகக் கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய வழக்கில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து தில்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

அதன்பின் அஃப்தாப் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது படிப்பதற்கு சட்டப் புத்தகங்களையும் குளிருக்காக போர்வையையும் வழங்குமாறு நீதிமன்றத்தில் அப்ஃதாப் கோரிக்கை முன்வைத்தார். அந்த வகையில் சிறை நிர்வாகிகள் அப்ஃதாபுக்கு புத்தகங்களையும், போர்வையையும் வழங்கினர்.