சீனாவைச் சேர்ந்த இன்ஜினியருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை… அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

சீனாவைச் சேர்ந்த இன்ஜினியர் ஜி சாவோகுன்  என்பவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா சென்று அங்கு உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இவர் சீன அரசின் உளவு அமைப்பின் உத்தரவின்படி அமெரிக்காவில் விமான வர்த்தக ரகசியங்களை திருட முயற்சி செய்துள்ளார். அதேபோல் ஆள் சேர்ப்புக்காக விஞ்ஞானிகளையும், இன்ஜினியர்களையும் அடையாளம் கண்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க அட்டார்னி ஜெனரலுக்கு அறிவிக்காமல் வெளிநாட்டு அரசின் ஏஜெண்டாக செயல்பட்டதற்காக குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.