அமெரிக்காவில் கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் கொரோனாவிற்கு முன்பு இதய நோய்க்கு 8 லட்சத்து 74 ஆயிரத்து 633 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு இதய நோய்க்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 28 ஆயிரத்து 741 ஆக அதிகரித்துள்ளது. இது 6.2 சதவீதம் அதிகமாகும்.

இதய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2003 -ஆம் ஆண்டு தான் அதிக அளவில் இருந்துள்ளது. அதாவது 9 லட்சத்தி 10,000 பேர் 2003-ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2020 -ஆம் ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதையும் தாண்டி விட்டது. ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரழிவு போன்ற காரணங்களினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தவர்கள் கொரோனா காலகட்டத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.