ஈரான் நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை ஹிஜாப் அணியாமல் ஸ்பெயின் நாட்டின் பிரதமரை சந்தித்திருக்கிறார்.

இஸ்லாமிய கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படும் நாடுகளில் ஈரானும் ஒன்று அந்த வகையில் இளம் பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியாததால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்பு, அவர் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு கடும் போராட்டமாக வெடித்தது.

ஈரான் அரசாங்கம் போராட்டங்களை ஒடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த போராட்டத்திற்கு உலகளவில் ஆதரவுகள் கிடைக்கிறது. இதற்கிடையில், ஈரான் நாட்டின் சாரா என்ற செஸ் வீராங்கனை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் கஜகஸ்தானில் நடைபெற்ற செஸ் சாம்பியன்சிப் போட்டியில் ஹிஜாப் அணியாமல் கலந்துகொண்டார்.

இதனை ஈரான அரசாங்கம் கடுமையாக கண்டித்தது. மீண்டும் தங்கள் நாட்டிற்குள் வரக்கூடாது என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்நிலையில் ஸ்பெயினிற்கு சென்றிருக்கும் அவர் அந்நாட்டு பிரதமரை நேரடியாக சந்தித்திருக்கிறார். அப்போதும் அவர் ஹிஜாப் அணிந்து கொள்ளவில்லை. அவருடன் சேர்ந்து ஸ்பெயின் பிரதமரும் செஸ் விளையாடி இருக்கிறார்.