இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவின் என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலமாக தனிப்பட்ட நபர்கள் ஆன்லைனில் பதிவு செய்து தடுப்பூசிகளை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தனி நபர்களின் விவரங்கள் கசிவதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன. அதாவது தனிநபர்களின் தொலைபேசி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட பல தரவுகள் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இந்தக் கோவின் செயலி மிகவும் பாதுகாப்பானது. அதில் உள்ள தனிநபர் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாகத்தான் உள்ளது. தகவல்கள் கசிவதாக வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.