இன்றைய காலகட்டத்தில் இணையதளம் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் அதிகமாகிவிட்டது. இதற்கு எவ்வித கட்டணமும் மக்களுக்கு இல்லை என்பதால் அதிகமானோர் இதனை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இணைய சேவை இல்லாமல் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முறையை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. UPI 123pay முறையை எந்த போன் பயனர்களும் upi பரிவர்த்தனைகளை செய்வதற்கான அம்சத்தை கொண்டுள்ளது.

இதற்கு முதலில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 9188-123-123 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும். இந்த செயல்முறை பயனருக்கு விருப்பமான முறையில் உள்ளது. நீங்கள் பணம் செலுத்த வேண்டிய பயனரை தேர்வு செய்து உங்கள் பண பரிவர்த்தனையை செய்யலாம்.