மத்திய அரசு பணியில் புதிதாக சேர உள்ள 70 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி காணொளி மூலமாக இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகின்றார். நாடு முழுவதும் 43 இடங்களில் வேலைவாய்ப்பு மேலா நிகழ்ச்சியில் மத்திய மற்றும் மாநில யூனியன் பிரதேச அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. சுமார் 70 ஆயிரம் பேர் நிதி சேவை, ரயில்வே, சுகாதாரம், வருவாய் மற்றும் உள்துறை உள்ளிட்ட துறைகளில் பணியில் சேர உள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை பிரதமர் மோடி இன்று வழங்குகின்றார்.