இந்தியாவின் தற்போது கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மதியம் 12 மணிக்கு மேல் மக்களால் வெளியில் நடமாடுவது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைத்துள்ளது.

அதன்படி ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என அமைச்சர் கோச்சா சக்தி நாராயணா தெரிவித்துள்ளார். அவ்வகையில் தினம்தோறும் காலை 7.45 மணி முதல் மதியம்  12.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மாணவர்கள் உடல்நிலையை  காப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.