தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தெலுங்கானா மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாநில மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் இது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 18ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனைப் போலவே அனைத்து ஜூனியர் கல்லூரிகளுக்கும் ஜனவரி 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் விடுமுறை முடிவடைந்து ஜனவரி 16ம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.