தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊமையன்கோட்டை கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் குமார் என்ற மகனும் ,தனஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் தனது குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தபோது சுவரில் இருந்த மின்சார மீட்டர் மீது எதிர்பாராதவிதமாக கை வைத்தார்.

இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கோவிந்தராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.