பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதுவும் தற்போது கோடை விடுமுறை என்பதால் மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. இனி நாம் செல்ல நாய்களையும் பூனைகளையும் ரயிலில் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படும்.
ரயில்வே வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஏசி-1 வகுப்பு பெட்டிகளில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான திட்டத்தை ரயில்வே அமைச்சகம் தயாரித்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கான முன்பதிவு உரிமையை TTE-க்கு வழங்குவது குறித்தும் ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.