நடிகை ஜியா சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சிறுவயதில் தான் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஒரு நாள் முன்பு தான் நோய்வாய் பட்டதாக சொன்னார். தனது பெற்றோர் ஏற்கனவே பிரிந்து விட்டதாகவும் அதனால் தனியாக குடும்ப மருத்துவரிடம் சென்றதாகவும் அவர் கூறினார். மருத்துவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். இது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் வருத்தமான விஷயம் என அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.