தென்னிந்திய திரைப்படங்களில் மூத்த எடிட்டர் வெங்கடேஸ்வர ராவ் காலமானார். இவரது உடல் இன்று சென்னையில் தகனம் செய்யப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, என்டிஆர், நாகேஸ்வர ராவ் ஆகியோரின் திரை பயணங்களில் அவர்களுடன் பணியாற்றியவர். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.