தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை என்ற பகுதி உள்ளது. இங்கு சுரேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக சிவனம்மாள் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகள்களும், 1 மகனும் இருக்கிறார்கள். இதில் சுரேஷுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்த நிலையில், அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
அந்த வகையில் நேற்று முன்தினமும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது கணவர் மது குடித்துவிட்டு வந்ததால் அவருடைய மனைவி அதைப்பற்றி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் தன் மனைவியை அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுரேஷை கைது செய்துள்ளனர். மேலும் தாய் மரணம் அடைந்த நிலையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் குழந்தைகள் இருவரும் பரிதவிப்பில் இருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.