“இந்தியா: மோடி மீதான கேள்வி”எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆவணப் படத்தில் 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி -மார்ச் மாதத்தில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில் லண்டன் வெளியுறவுத்துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா பேசிய கருத்துகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பேசி உள்ள ஒருவர் கலவரத்திற்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தான் காரணம் என சுட்டிக்காட்டுகிறார்.
இது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணை குழு அளித்த அறிக்கையும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையில் கலவரத்தின் போது முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்துவதற்காக அவர்களின் உடமைகளை சேதப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.