வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து 72 மணி நேரத்தில் பதில் அளிக்க மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் திடீரென நேற்று மதியம் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மல்யுத்த கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுகளையும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தனர்.

இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாஜக எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. அப்படி ஏதும் நடந்திருந்தால் தூக்கில் தொங்க தயார் என சவால் விடுத்தார். இந்நிலையில் வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து 72 மணி நேரத்தில் பதிலளிக்க மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.