கால்பந்து போட்டி ஒன்றின் நேரலையின் போது திடீரென அநாகரீக சத்தம் ஒலித்ததற்காக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கின்றது. லண்டனில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பின் போது பெண்ணின் ஆபாச சத்தம் ஒலித்துள்ளது.

அப்போது போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த வர்ணனையாளரும் முன்னாள் கால்பந்து வீரருமான லினேகர் சிரிப்பில் ஆழ்ந்தார். இதற்கிடையில் யூடியூப் பிரபலமான டேனியல் ஜார்ஜஸ் தாம் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறி மைதானத்தில் இருப்பதாக தோன்றிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து தனியார் நிறுவன செய்தி தொடர்பாளர் நேரலையில் நேர்ந்த தவறுகளுக்காக மன்னிப்பு கோருவதாக கூறியுள்ளார்.