கிரிஷி உடான் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2021 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக சிறப்பு விமானத்தில் வேளாண் விலை பொருட்களை விரைந்து எடுத்து செல்வதற்காக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பழங்குடியினர் பகுதி, மலைப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து உணவுப் பொருட்களை விரைவாக எடுத்துச் செல்வதற்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் கூறியதாவது, கிரிஷி உடான் திட்டம் மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது. தற்போது இந்த திட்டம் 31 விமான நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் கூடுதலாக 21 விமான நிலையங்களை இணைக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.