இந்தியாவில் உள்ள சில முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது சொத்து ஆலோசனை நிறுவனமான அனரார்க் ப்ராப்பர்ட்டி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் படி 2023-ம் ஆண்டில் மட்டும் வீட்டு வாடகை 23 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் பிறகு கொல்கத்தாவில் உள்ள ராஜ்யம் மற்றும் இஎம் பைபாஸ் போன்ற பகுதிகளில்‌ 16 சதவீதம் வரை வீட்டு வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலி குஞ்ச் நகரத்தில் 2000 சதுர அடி உள்ள வீட்டின் வாடகை 11 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 97 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன் பிறகு அலிபோரா நகரத்தில் 4000 ரூபாய் உயர்ந்து 65 ஆயிரம் ரூபாயாக வீட்டு வாடகை அதிகரித்துள்ளது. மேலும் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட ஐடி நகரங்கள் இருக்கும் பகுதிகளிலும் வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.