பெங்களூருவில் ஏரோ இந்தியா விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளை சேர்ந்த ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, சர்வதேச சந்தை பாதுகாப்பு தொழில்களுக்கான மிகப்பெரிய உள்நாட்டு உற்பத்தி சந்தையாக இந்தியா திகழ்கிறது.

இந்தியாவின் வளர்ச்சி பாதையில் உலக அளவில் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் பங்கெடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் தொழில் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சட்டமும் இருக்கிறது. இந்தியாவில் பாதுகாப்பு உபகரண உற்பத்தி துறையில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்கள் ஊக்கத்தொகை வழங்குகிறது. மேலும் பாதுகாப்பு உற்பத்தி துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.