இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆன்லைனில் டிஜிட்டல் முறைப்படி கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் அமைப்பில் சேர்க்கப்பட்ட முகவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். கடனை திரும்ப செலுத்தாத பட்சத்தில் கடன் வாங்கிய வரை தொடர்பு கொள்ளலாம். அதன் பிறகு கடன் மீட்பு நடவடிக்கையை தொடர்வதற்கு முன்பாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

காசோலை பவுன்ஸ் மற்றும் அபராதம் தொடர்பான தகவல்களை தனித்தனியாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அனைத்து கடன் சேவை வழங்குனர்களும் கண்டிப்பாக குறைதீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும். குறைதீர்க்கும் அதிகாரியை கடன் வாங்குபவர்களை கையாளும் நிறுவனங்கள் மட்டுமே நியமிக்க வேண்டும். மேலும் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிக வட்டி வசூலிப்பதை தடுப்பதற்காகவும் தவறான கடன் வசூலை கட்டுப்படுத்தவும் கடந்த வருடம் ரிசர்வ் வங்கியால் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.