இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்ததன் பலனாக காதி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக காந்திகிராம தொழில் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி 2021-22 ஆம் நிதியாண்டில் காதி பொருட்களின் உற்பத்தி 84,290 கோடியாகவும், விற்பனை 1,15,415 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காதி தொழிலாளர்களுக்கு ஊதியத்தை நூல் சுருளுக்கு ரூ. 7.50 இலிருந்து ரூ. 10 ஆக உயர்த்துவதற்கு காந்திகிராமத் தொழில் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் கைவினை கலைஞர்களின் மாதாந்திர வருமானம் 33 சதவீதமும், நெசவாளர்களின் வருமானம் 10 சதவீதமும் உயரும். மேலும் இந்த அறிவிப்பு காதி நெசவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.