வருமான வரி தாக்கல் படிவங்கள் வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்படும். அந்த வகையில் நடைபாண்டில் வரி தாக்கல் நடைமுறைக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் நோக்கத்தில் தற்போது படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 2023 – 2024ஆம் கணக்கிட்டு ஆண்டுக்கான ஐ.டி.ஆர் படிவங்கள் 1 முதல் 6 ஐ.டி.ஆர்-வி  படிவம் போன்றவை வெளியீடு தொடர்பான அறிக்கையை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து நிபுணர்கள் கூறியதாவது, இந்த வருமான வரி தாக்கல் படிவங்களை முன்கூட்டியே வெளியிடப்படுவதனால் அனைத்து தரப்பினரும் பலனடைவார்.

மேலும் வருமான வரி தாக்கல் செய்பவர்கள், கணக்காயர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய உதவும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் போன்றவையும் பலனடையும். அதேபோல் வீட்டு சொத்து, ஊதியம், மற்ற ஆதாரங்கள் போன்றவற்றின் மூலமாக ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம் வரை ஈட்டும் தனிநபர்கள் ஐ.டி.ஆர் -1 படிவத்தை தாக்கல் செய்வார். அதேபோல் தொழில் நடவடிக்கைகள் மூலமாக ரூ.50 லட்சம் வருமானம் ஈட்டும் தனிநபர்களும், ஹிந்து கூட்டு குடும்பங்களும் ஐடிஆர் -4 படிவத்தை தாக்கல் செய்வர். தொழில் நிபுணர்கள் ஐடிஆர் -3 படிவத்தையும், சொத்துக்களை வாடகைக்கு விட்டு வருமானம் பார்ப்பவர் ஐடிஆர் -2 படிவத்தையும், தொழில் நிறுவனங்கள் ஐடிஆர்-6 படிவத்தையும் தாக்கல் செய்வர்.