2026 ஐபிஎல் தகுதிச்சுற்று 2-ல் குஜராத் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து, ஃபைனல் வாய்ப்பை நழுவவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் வெற்றிக்காகப் போராடியும் பலனில்லாமல் போன உச்சகட்ட ஆத்திரத்தில், ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரன் மீது தன் கோபத்தை காட்டியுள்ளார்!
இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விளையாட முடியாது என்று கூறிவிட்டு, இப்போது இங்கிலாந்தில் நடக்கும் டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்காக சாம் கரன் ஜாலியாக விளையாடி வருவதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து கொதித்துப் போன சங்கக்காரா, “அவரால் விளையாட முடியாது என்று எங்களிடம் சொல்லப்பட்டது, அதை நம்பி அவருக்குப் பதிலாக தசுன் ஷனகாவை எடுத்தோம்; ஆனால் அவர் சர்ரே அணிக்காக 2, 3 போட்டிகளில் விளையாடுவதைப் பார்த்தபோது செம ஏமாற்றமாக இருந்தது” எனப் போட்டுடைத்துள்ளார்.
மேலும், காயங்களை நாங்கள் புரிந்து கொள்வோம், ஆனால் இப்படி ஏமாற்றுபவர்கள் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கடுமையான மற்றும் வலுவான கொள்கை மூலம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கக்காரா விடுத்திருக்கும் கோரிக்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது!
