கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்றும், நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து கள ஆய்வு செய்ய உள்ளார். ஆய்வுகளுடன் விவசாய சங்க பிரதிநிதிகளுடனும் பேசுகிறார். இந்த பயணத்தின்போது டிஜிபி, தலைமை செயலாளர் மற்றும் 60 ஐஏஎஸ் அதிகாரிகள் உடனிருப்பர்.
இந்நிலையில் இன்று களஆய்வு மேற்கொள்ள விழுப்புரத்திற்கு CM ஸ்டாலின் வரும் போது, பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பூக்களும் தூவக்கூடாது, மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ட்ரோன்களை அந்த நேரத்தில் பறக்க விடக்கூடாது எனவும் தடை விதித்துள்ளார். முதலமைச்சரின் வருகையால் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.