தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து நேற்று வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல் குறித்து புகாரளித்ததால் கொலை செய்தது தெரியவந்தது.

உயிரிழந்த பிரான்சிஸ்க்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் அறிவித்தார்.  மேலும், கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க, தூத்துக்குடி மாவட்ட SP பாலாஜி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையை தடுக்க புகார் அளித்ததற்காக இவர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.