கலைஞர் நினைவிடம் திறப்பு தேதி…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…!!!

சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் கருணாநிதி கால்படாத இடம் இல்லை. சந்திக்காத மனிதர்கள் இல்லை. தொடங்காத திட்டம் இல்லை. உருகாத உடன்பிறப்புகள் இல்லை.

இப்படி ஊர் தோறும் -நகர் தோறும்- கிராமம் தோறும் விழா எடுக்க தொடங்கினால் நூற்றாண்டு விழாவையே 10 ஆண்டுகளுக்கு கொண்டாட வேண்டி வரும். தமிழ்நாட்டு தலைவர்கள் பெயரால் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கிய கருணாநிதி பெயரிலான சின்னங்கள் மாதம்தோறும் திறக்கப்பட இருக்கின்றன என்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.