புதுச்சேரி மாநில முத்தியால்பேட்டை பகுதியில் வெங்கட்ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.டெக் முடித்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்நாட்டைச் சேர்ந்த ‌கிலேசி பெத் என்ற பெண்ணை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், வெங்கட்ராம் பணி முடிவடைந்த நிலையில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

அதன் பிறகும் இருவரும் செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி இருவருக்கும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் கலந்து கொண்டனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வெளியான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.