சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவனைப் பிரிந்து தனது 14 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக மகளின் படிப்பை நிறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அவர் அப்பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த முத்துலட்சுமி என்பவர் பாலியல் புரோக்கராக இருக்கிறார்.  பின் அதனை திரும்ப கொடுக்க இயலாததால், அதற்கு பதிலாக தன் மகளை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து முத்துலட்சுமி அந்தப் சிறுமியை  கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 23ஆம் ஆண்டு வரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து அவர் தப்பித்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவரது தாய் இரக்கமில்லாமல் தனது மகளை அழைத்துச் சென்று முத்து லட்சுமியிடம் ஒப்படைத்துள்ளார். மறுபடியும் அங்கிருந்து தப்பித்த சிறுமி, ஒருவரின் துணையோடு 8 மாதமாக மணலி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமியை தொடர்பு கொண்ட அவரது தாய் மீண்டும் முத்துலட்சுமியிடம் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி விரைந்து வந்த காவல்துறையினர் அச்சிறுமியின் தாய், புரோக்கர் முத்துலட்சுமி (32), முத்துலட்சுமியின் கணவர் நிஷாந்த்( 37), மகேஸ்வரன் (24), கிஷோர் (22), அஜித் குமார்(20) ஆகிய 6 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.