அமெரிக்காவில் மர்ம நபர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கோஷன் நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் மர்ம கும்ப கும்பல் ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை துப்பாக்கியுடன் நுழைந்தது. அதன் பின் அந்த வீட்டிலிருந்த அனைவரையும் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து அந்த மர்ம கும்பல் தப்பித்து சென்றுள்ளது. இந்த துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற வீட்டிற்கு வெளியிலும், உள்ளேயும் பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்தனர்.

அதன் பின் சுட்டுக் கொல்லப்பட்ட இந்த குடும்பம் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அது தொடர்பான தொழில் போட்டியில் எதிர்தரப்பு கும்பல் அவர்களை கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார்  சந்தேகத்து வருகின்றனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.