மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அருகே உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது. இங்கு 35 வயதுடைய வினோத்குமார் என்பவர் தினமும் வந்து உடற்பயிற்சி செய்வார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வழக்கம் போல வினோத்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் வினோத்குமார் மயங்கி விழுந்தார். அவரை சக நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வினோத் குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் வினோத்குமாரின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.