ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் சிவ சேனாவின் கட்சி சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கிய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதேபோல
ஷிண்டே தரப்பும் பதில் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் ஷிண்டே 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
சிவசேனா கட்சி மற்றும் அந்த கட்சியினுடைய வில் அம்பு ஆகியவற்றை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கிய விவகாரத்தில் தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து, அதனை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே வழக்கு தொடர்ந்தார்.