ஆலந்தூர் பகுதியில் ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பிய ஓய்வுபெற்ற பெண் ராணுவ அதிகாரியிடம், ப்ராஜெக்ட் மேனேஜர் கடுமையாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட சீவேஜ் அமைப்பினால் ஆற்றில் கழிவுநீர் கலப்பதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் ராணுவ அதிகாரி ஒருவர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அப்போது, அங்கிருந்த ப்ராஜெக்ட் மேனேஜர், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ முன்னிலையிலேயே அந்த பெண் அதிகாரியிடம் மிகவும் கடுமையான தொனியில் பேசி, அலட்சியமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டு கடும் கோபமடைந்த தவெக எம்.எல்.ஏ, உடனடியாகத் தலையிட்டு அந்த ப்ராஜெக்ட் மேனேஜரைச் சுட்டிக்காட்டி எச்சரித்தார். “என் முன்னாடியே அவங்ககிட்ட இப்படி எல்லாம் பேசக்கூடாது! நீங்க ப்ராஜெக்ட்ட முடிச்சுட்டு ஊருக்குப் போயிருவீங்க, ஆனா அவங்கதான் இந்த ஊர்ல வாழப்போறாங்க. அதனால பொதுமக்கள்கிட்டயும், ஓய்வுபெற்ற பெண் ராணுவ அதிகாரிகிட்டயும் இப்படி கடுமையா பேசுற வேலையை வச்சுக்காதீங்க!” என்று ஆவேசமாகப் பாய்ந்தார்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்ட விவகாரம் குறித்துப் பேசிய எம்.எல்.ஏ, “யாரிடம் அனுமதி பெற்று இப்படி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் வகையில் சீவேஜ் அமைத்தீர்கள்?” என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி, அந்த ப்ராஜெக்ட் மேனேஜரை பதறவைத்தார்.
என் முன்னாடி இப்படி பேசாதீங்க..! – officer -ஐ வெளுத்து வாங்கிய MLA#alandur #mla #Sewage #Shocking #viral #galatta pic.twitter.com/jVvuySOKCp
— Galatta Media (@galattadotcom) July 21, 2026
பொதுமக்களுக்கு ஆதரவாகவும், ஓய்வுபெற்ற பெண் ராணுவ அதிகாரிக்கு ஆதரவாகவும் தவெக எம்.எல்.ஏ இறங்கி அடித்து, ப்ராஜெக்ட் மேனேஜரைத் தட்டிக்கேட்ட இந்த காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. எம்.எல்.ஏ-வின் இந்த அதிரடி நடவடிக்கைக்கும், மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறைக்கும் சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
