கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர் அந்த இளம் பெண்ணை காதலித்த நிலையில் அவரோ வாலிபரை காதலிக்க மறுத்துவிட்டார். இதனால் வாலிபர் மிகுந்த மன வேதனையில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தச்சூருக்கு சென்றார்.

அவர் மிகுந்த மனவேதனையில் எந்த நிலையில் சம்பவ நாளில் அருகில் உள்ள விவசாய நிலத்தில் சென்று ஒரு மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காமராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.