
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள விஜய் நகர் பகுதியில், இளம் பெண்கள் குழுவிற்கு இடையே நடந்த கடுமையான சண்டை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மே 18 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு, மல்ஹார் மெகா மால் அருகே நேற்று நடை பெற்றதாக கூறப்படும் நிலையில் இணையத்தில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், பெண்கள் ஒருவரையொருவர் தாக்குவதும், தலைமுடியை இழுப்பதும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதும் காணப்படுகிறது. அவர்கள் பப்பிலிருந்து குடிபோதையில் வெளியே வந்ததாகக் கருதப்படுகிறது.
इंदौर के विजय नगर में नशे में धुत्त लड़कियों ने एक -दूसरे को खूब कूटा और सड़क पर घसीटा।
इंदौर में सरकारी तौर पर Night Culture तो बंद हो चुका है, लेकिन वास्तविकता में Night Culture और नशा खूब चल रहा है।#Indore #nightculture pic.twitter.com/aIUFPThfnb
— The Journalist (@Journalist_av) May 20, 2025
இந்த சம்பவம் பற்றி நேஹா அஜ்னர் (வயது 20) என்பவர் விஜய் நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் தாக்கப்பட்டதுடன், துஷ்பிரயோகத்துக்கும் ஆளானதாகக் கூறியுள்ளார். அவரது புகாரின் படி, கிளப்பில் இருந்து வெளியேறும்போது ஒரு பெண் ஆபாசமாக பேசியதாகவும், அதை எதிர்த்ததற்காக நேஹா மற்றும் அவரது தோழி புல்புல் ஆகியோர் மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு பெண்ணால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் மே 19 அன்று நள்ளிரவு 12:05 மணி முதல் 12:20 மணி வரை நடந்ததாக காவல்துறை உறுதி செய்துள்ளது. தற்போது, BNS பிரிவுகள் 115, 296 மற்றும் 3(5) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காண, மாலில் உள்ள சிசிடிவி காட்சிகள் போலீசால் ஆய்வு செய்யப்படுகின்றன. தாக்கியவர்களின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.