ஊருக்காக வாழ்ந்த மருத்துவர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

தன்னுடைய வாழ்நாளில் 16 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ள மருத்துவர் கௌரவ் காந்தி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 41. குஜராத் ஜாம் நகரை சேர்ந்த இவர் இந்தியாவின் முன்னணி இருதய நோய் நிபுணர் ஆவார். இருதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளையும் இவர் மேற்கொண்டு வந்துள்ளார். தனது வாழ்நாளில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றிய இவர் இதுவரை சுமார் 16,000 இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சேவைகளை ஆற்றிய இவரின் மரணம் மருத்துவ உலகிற்கு மிகப் பெரும் இழப்பு என சக மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.