மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற இதுவரை 28 வருடங்கள் பணியாற்ற வேண்டி இருந்த நிலையில் அந்த வயது வரம்பு தற்போது 25 வருடங்கள் என்று குறைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 25 ஆண்டுகள் பணி முடிந்தவுடன் முழு ஓய்வூதியம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.