ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து மறக்கும் முன், அதே மாநிலத்தில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஜாஜ்பூர் கியோஞ்சார் சாலை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கு அடியில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.

இன்ஜின் இல்லாத சரக்கு ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியதையடுத்து, தண்டவாளத்தில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள், சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கு அடியில் பதுங்கினர். இந்த நிலையில் பலத்த காற்று வீசியதால் ரயில் பெட்டிகள் நகர்ந்தன. இதனால் 6 தொழிலாளர்கள் போகியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர். ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.