சீனாவை சேர்ந்த ஹுவாங் லிஹாங்(31) என்ற பெண் தனது கணவருடன் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள பன்யுவாங்கியில் உள்ள இஜென் பள்ளத்தாக்கிற்கு சூரிய உதயத்தை காண அதிகாலையில் சென்றார். அப்போது எரிமலையின் விளிம்பில் நின்று புகைப்படம் எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து 250 மீட்டர் பள்ளத்தாக்கில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது உடலை 2 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.