சூரத்தை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் பிரதமர் மோடியின் தங்க சிலையை உருவாக்கியுள்ளார். குஜராத்தில் பாஜக பெற்ற வரலாற்று வெற்றியை நினைவுபடுத்தும்விதமாக இந்த தங்க சிலையை அவர் உருவாகியுள்ளார். மார்பளவு கொண்ட இந்த சிலையின் மதிப்பு 11 லட்சம் ஆகும். அது தெரிந்து பலரும் மோடியின் சிலையை வாங்க தயாராக உள்ளனர். ஆனால், அவர் தான் மோடியின் தீவிர ரசிகன், இது விற்பனைக்கு அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து நகை வியாபாரியான பசந்த் போஹ்ரா கூறுகையில், நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன். குஜராத் தேர்தல் வெற்றிக்கு காரணமான அவரை பாராட்டும் விதமாக இந்த மார்பளவு சிலையை செய்தேன். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதால் மூன்று மாதங்களாக 20 கலைஞர்களை வைத்து இந்த சிலை உருவாக்கினேன். பலரும் இதை விலைக்கு கேட்கிறார்கள். ஆனால் நான் விலைக்கு கொடுக்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.