நிரந்தர கணக்கு எண் (அ) பான்கார்டானது அனைத்து வித நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய ஆவணமாக விளங்குகிறது. ஒரு தனி நபர் (அ) நிறுவனத்தின் வரியையும் பான்கார்டு வாயிலாக வருமானவரி ஆணையம் கண்காணிக்கிறது. அதோடு உங்களின் பான்கார்டை தொலைத்துவிட்டால் ரூபாய்.10,000 அபராத தொகை செலுத்தவும். இதற்கிடையில் பான் எண்ணில் பிழை ஏற்பட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்படும்.

மேலும் வருமானவரி ஆணையத்திடம் நீங்கள் தவறான பான் தகவலை வழங்கினால் ரூபாய்.10,000 அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல் இரண்டு பான்கார்டுகளை வைத்திருந்தாலும், அபராத தொகை செலுத்தவும். அதுமட்டுமல்லாமல் 2-வது பான் கார்டு உடனே வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.  இதனை ஆன்லைன் முறையில் மோற்கொள்வது குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.

# முதலாவதாக incometaxindia.gov.in எனும் தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிகாரபூர்வமான இணையதளததுக்கு போக வேண்டும்.

# “புது பான்கார்டு, மாற்றத்துக்குரிய கோரிக்கை” (அ) “பான் தரவு திருத்தம்” என்பதனை கிளிக் செய்யவும்.

# தற்போது தோன்றும் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அவற்றில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்திசெய்து ஏதேனும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) அலுவலகத்துக்கு சென்று சமர்ப்பிக்கவும்.