மேற்குவங்க மாநிலத்தில் பெல்டிஹா என்ற கிராமத்தில் 76 வயதான அனிமா சக்கரவர்த்தி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் பல வீடுகளுக்கும் சென்று வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். அவ்வாறு வீட்டு வேலை செய்யும் போது வீட்டில் இருக்கும் உணவை பலரும் கொடுப்பார்கள். ஆனால் அவர் தேநீர் மற்றும் சத்தான திரவ பானங்களை மட்டுமே சாப்பிட்டுள்ளார். நாளடைவில் இதற்கு பழகிய அவர் உணவு உண்பதை நிறுத்திவிட்டார். அதாவது கடந்த 50 வருடங்களாக திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு இவர் ஆரோக்கியமாக இருப்பதை கண்டு ஒட்டு மொத்த கிராமமே ஆச்சரியமடைந்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், உடலுக்கு ஆற்றல் மற்றும் கலோரிகள்,ஊட்டச்சத்துக்கள் உணவு போன்ற உணவிலிருந்து மட்டுமல்லாமல் திரவ உணவில் இருந்தும் தேவைப்படுகிறது. நாம் எதை சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல எதில் தேவையான சத்துக்கள் இருப்பது தான் முக்கியம். பெரும்பாலும் உடல்நிலை மோசமானவர்களுக்கு திரவ உணவை கொடுக்கிறோம். எனவே இந்த வயதான பெண்ணின் உடல் நிலையை பார்த்து அறிவியல் ரீதியாக யாரும் ஆச்சரியப்பட வேண்டிய தேவை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பாட்டி எந்த உணவும் இல்லாமல் ஹார்லிக்ஸ் மற்றும் டீ மட்டும் குடித்து வருவது குறிப்பிடத்தக்கது.