தமிழ்நாட்டில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இறுதி கட்ட பிரச்சாரத்தை நெருங்கி வருகிறது. தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டிகள் நிலவும் நிலையில், பிரச்சாரமானது சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக கட்சி நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் விருதுநகர் தொகுதியில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக நேற்று பிரேமலதா விஜயகாந்த் விருதுநகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, விஜய பிரபாகரன் வெற்றி பெற்றால் அவர் பதவியில் இருக்கும் 5 வருடங்களுக்கும் சொந்த செலவில் 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதன் பிறகு கேப்டன் பிறந்த நாளில் முதுநிலை படித்த 60 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு ‌ வருடம் தோறும் தலா ரூ.10,000 வழங்கப்படும். இதனையடுத்து விருதுநகரில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இலவச நீட் பயிற்சி மையம், கணினி பயிற்சி மையம் மற்றும் தையல் பயிற்சி மையம் ஆரம்பிக்கப்படும். மேலும் பயிற்சி முடிந்த பிறகு பெண்களுக்கு சொந்த செலவில் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.