காற்று மாசுபாடு அதிகரிப்பதால், டெல்லியில் BS-3 பெட்ரோல், BS-4 டீசல் வாகனங்களுக்கு நேற்று (ஜன.,9) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது காற்றின் மாசு அளவு 434ஐ தாண்டியுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது தற்காலிகமானதுதான் எனவும் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் 2017 ஏப்ரல் முதல் BS-4 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பி.எஸ்., என்பது, ‘பாரத் ஸ்டேஜ்’ என்பதின் சுருக்கம். வாகனங்கள் வெளியிடும் புகையால், மாசு ஏற்படுவதை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவானது தற்காலிகமானது தான் எனவும் கூறப்பட்டுள்ளது.