நாடு முழுவதும் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்திகள் வெளியிடுவதற்கான சட்டத்தின்படி நிழல் குறியீட்டை பின்பற்ற வேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தொலைக்காட்சிகளில் தனிநபர்களின் இறந்த உடல்கள், ரத்தம் சிதறி கிடப்பது, காயமடைந்த நபர்களில் புகைப்படம் அல்லது வீடியோக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இறக்கமற்ற முறையில் அடிக்கப்படுவதை காட்டுகின்றன.

எனவே இத்தகைய கொடூரமான பதிவுகளை காட்சிப்படுத்தும் போது அந்த காட்சிகளை மாற்றியமைத்தல் அல்லது எடிட் செய்தல் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி காட்சிப்படுத்த வேண்டும். மேலும் விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை காட்சிப்படுத்தும் போது பார்வையாளருக்கு வருத்தம் அளிக்காத விதமாக இருக்க வேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.