டிவி சேனல்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சமீப காலமாக டிவி சேனல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களில் தனி உரிமை மீறல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. தீங்கிழைக்கும் விதமாக, அவதூறுகளை பரப்பு மிதமாக உள்ளடக்கங்கள் காணப்படுகிறது. பெரியோர்கள், முதியவர்கள், நடுத்தர வயது, சிறு வயது குழந்தைகள் உள்ளிட்டவர்கள் அனைவருமே பார்ப்பதற்கு ஒரு பொழுதுபோக்கு சாதனமாக தொலைக்காட்சி மாறி உள்ளது. இந்த சூழ்நிலையில் பொறுப்புணர்வையும், ஒழுக்கத்தையும் அதிகம் கடைபிடிக்க வேண்டிய இடத்தில் டிவி சேனல்கள் இருக்கின்றன.

அதற்காகவே நிகழ்ச்சி விதிமுறைகள், விளம்பர விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் ரிஷப் பண்ட்டின் கார் விபத்து வீடியோ அப்படியே ஒளிபரப்பாகின. அதேபோல், டெல்லியில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பலியான வீடியோவும் வந்தது. இதன் உள்ளடக்கங்களை மாற்றாமல் ஒளிபரப்புவது சேனல்களின் சேவைகள் நிறுத்தப்படுவதற்கு வழி வகுக்கும். முறையாக விதிமுறைகளை பின்பற்றும்படி” எச்சரித்துள்ளது.