ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கும், பார்சல் மற்றும் டெலிவரி பெற்று சாப்பிடுவதற்கும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டுமா? என்று எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேல்முறையீட்டு தீர்ப்பாணையத்தில் குஜராத் அமர்வில் மனுதாக்கள் செய்தது .இந்த வழக்கு விசாரணையில் மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஒரு உணவகத்தின் பார்சல் மற்றும் டெலிவரி சேவைகள் அனைத்தும் உணவு சேவைகள் பிரிவின் கீழ் தான் வரும் என்றும், இதன் அடிப்படையில் தான் ஹோட்டல்களில் சமைக்கப்பட்டு வழங்கப்படும் உணவுகளை உணவகத்திலேயே அமர்ந்து சாப்பிடுதல், பார்சல் டெலிவரி பெற்று சாப்பிடுதல் ஆகியவற்றிற்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது ஹோட்டலில் சமைக்கப்பட்ட உணவை அங்கேயே சாப்பிடுபவர்களுக்கும், பார்சல் எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கும் டெலிவரி பெற்று சாப்பிடுபவர்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.