நாட்டில் தொழில்நுட்பம், பொறியியல், அறிவியல், கட்டிடக் கலை, வணிகம் உட்பட பல பிரிவுகளின் பாடங்களுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) வருடந்தோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வு டெல்லி, பம்பாய், குவாஹாத்தி, கான்பூர், மெட்ராஸ் ரூர்க்கி, காரக்பூர் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூர் தேசிய ஒருங்கிணைப்பு வாரியம் போன்றவை வாயிலாக சுழற்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது.

அந்த அடிப்படையில் 2023 ஆம் வருடத்துக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கான்பூர் (IIT Kanpur) சார்பில் நடத்தப்படவுள்ளது. இதற்குரிய தேர்வு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 போன்ற தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டு இன்று முதல் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் செயல்பாட்டு காரணத்துக்காக அனுமதி சீட்டு வெளியிடும் தேதியை ஒத்திவைப்பதாக IIT கான்பூர் அறிவித்து உள்ளது. அந்த அடிப்படையில் அனுமதி சீட்டு வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் gate.iitk.ac.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்கு சென்று தங்களின் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.