உத்தரபிரதேசம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றாகிய தாஜ்மஹாலை பார்க்க தினசரி பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கேஷ்லெஸ் டிக்கெட் சேவை கொண்டுவரப்பட்டு உள்ளது. அதன்படி  சுற்றுலாப் பயணிகள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவதற்கு பதில், க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என ஆக்ரா மேம்பாட்டு ஆணையமானது தெரிவித்து உள்ளது.

இனிமேல் டிக்கெட்டை பெற பயணிகள் நீண்டவரிசையில் நிற்க தேவையில்லை எனவும் அவர்களது நேரம் மிச்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தாஜ்மஹாலில் இணைய வசதி மேம்படுத்தப்பட்டு வருவதாக ஆக்ரா மேம்பாட்டு ஆணையத்தின் துணை தலைவர் சச்சித் கவுர் கூறினார். தாஜ்மஹாலில் வி.ஐ.பி நுழைவுகள் ஏதும் இல்லை. எனினும் வி.ஐ.பி நுழைவு எனும் பெயரில் பலர் மோசடி செய்து வருவதால் பார்வையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இதனிடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதேனும் புகார் இருந்தால் 9412330055 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக்கொள்ளலாம் என குறிப்பிட்டார்.