ஆறு நடமாடும் உழவர் சந்தைகள் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் இந்த உழவர் சந்தைகளை இயக்க ஆர்வமுள்ள வருங்கால வேளாண்மையாளர்களை மானிய திட்டத்தின் மூலம் அணுகி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்காக ஆறு நடமாடும் சந்தைகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் விவசாயிகள் ஒரு நாளைக்கு 145 முதல் 163 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை விற்பனை செய்கிறார்கள். இதற்கிடையில் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டையை வழங்குவதற்கும் பழைய அடையாள அட்டையை மாற்றுவதற்கும் வேளாண் துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.